மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து மேலும் ஓர் இந்திய வீரர் விலகல்

Report Print Basu in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் முடிந்த டி-20 தொடரை 2-0 என இந்திய கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி-20ஐத் தொடர்ந்து புவனேஷ்வர் குமார் வலியைப் பற்றி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் விளையாடிய புவனேஷ்வர் குமார் , வலி காரணமாக ஒரு நாள் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், தற்போது வரை புவனேஷ்வர் குமார் தொடர்பில் பிசிசிஐ-யிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த ஷிகர் தவான், முழங்கால் காயம் காரணமாக டி-20 மற்றும் ஒரு நாள் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் இடம்பிடித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்