இந்திய வீரர் அடித்த சிக்ஸரை ஒற்றை கையில் பறந்து தடுத்த மேற்கிந்திய தீவு வீரர்... வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா அடித்த பந்தை பந்தை மேற்கிந்திய தீவு வீரர் லிவிஸ் அபாரமாக தடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இப்போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித்சர்மா அதிரடியாக ஆடி 71 ஓட்டங்கள் குவித்தார். இவர் 27 ஓட்டங்கள் எடுத்திருந்த போது சுழற்பந்து வீச்சாளர் பிரீரே வீசிய பந்தை லெக் திசையில் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார்.

அப்போது பந்தானது, சிக்ஸ்ரை நோக்கி பறந்து கொண்டிருந்த போது, அங்கு பீல்டிங் செய்து கொண்டிருந்த லிவிஸ் அபாரமாக அந்தரத்தில் பறந்து ஒற்றை கையில் தடுத்து வீசினார். இதனால் பவுண்டரி மற்றும் சிக்ஸர் தடுக்கப்பட்டது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்