இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த ஊரை சேர்ந்தவர்கள் அதிகம் வரவேண்டும்! தமிழக வீரரின் விருப்பம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணிக்கு மதுரையில் இருந்து அதிக அளவில் வீரர்கள் வர வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 60-வது ஆண்டு விழா மற்றும் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள், நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மதுரை பாண்டியன் ஹொட்டலில் நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஆர்.அஸ்வின் கலந்து கொண்டு கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பரிசுகள் வழங்கினார்.

அவர் பேசுகையில், மதுரை தொன்மை கால நகரமாக இன்றும் விளங்கி வருகிறது.

மதுரையில் கிரிக்கெட் விளையாட்டுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மதுரையைப் போன்ற பாரம்பரியமிக்க நகரில் இருந்து இந்திய அணிக்கு அதிக வீரர்கள் வர வேண்டும்.

இளைஞர்கள் தோல்வியை கண்டு சோர்ந்து விடாமல், விடாமுயற்சியுடன், தொடர் முயற்சியும் இருந்தால் சாதிக்க முடியும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்