இலங்கை அணியினர் எங்கள் நாட்டுக்கு வந்ததற்கு நன்றி! பாகிஸ்தான் வீரரின் வைரலாகும் பதிவு

Report Print Raju Raju in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட அந்நாட்டுக்கு இலங்கை அணி சென்றுள்ள நிலையில் பாகிஸ்தான் வீரர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

திமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு நேற்று சென்றது.

அங்குள்ள இஸ்லாமபாத் விமான நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு பலத்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

முதல் டெஸ்ட் போட்டி வருகிற 11ம் திகதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் 19ம் திகதி கராச்சியில் நடக்கிறது.

இந்நிலையில் இலங்கை அணியை வரவேற்று பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், எங்களின் அழகான நாட்டுக்கு இலங்கை அணியை வரவேற்கிறோம்.

இங்கு வருகை தந்து வரலாற்று சிறுப்புமிக்க தொடரில் அங்கமாக இருப்பதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்