மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு.. கிரிக்கெட் போட்டி நிறுத்தம்: கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய உள்ளுர் தொடரான ரஞ்சி டிராபி போட்டியின் போது மைதானத்தில் பாம்பு புகுந்ததால் போட்டி தொடங்க சிறிது தாமதம் ஏற்பட்டது.

2019-20 ரஞ்சி டிராபி தொடரின் முதல் போட்டி இன்று ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள டாக்டர் கோகராஜு லியாலா கங்கராஜு ஏ.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.

இதில், முன்னாள் சாம்பியனான விதர்பா அணியும், ஆந்திரா அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்ற விதர்பா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

போட்டியின் போது மைதானத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மைதான ஊழியர்கள் பாம்பை விரட்டியதை அடுத்து நிறுத்தப்பட்டிருந்த போட்டி தாமதமாக தொடங்கியது.

மைதானத்தில் பாம்பு புகுந்த வீடியோவை உள்ளுர் தொடருக்கான பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்