மே.தீவுகள் பந்துவீச்சில் திணறிய இந்திய வீரர்கள்: அதிரடி காட்டிய இளம்வீரர்

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டியானது திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே திணற ஆரம்பித்தனர்.

துவக்க ஆட்டக்காரர்களான லோகேஷ் ராகுல் 11 ரன்களிலும், ரோஹித் சர்மா 15 ரன்களிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்து ரசிகர்களை ஏமாற்றினர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே ஆரம்பத்தில் திணறினாலும், நேரம் செல்லச்செல்ல அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 54 ரன்களை குவித்து வெளியேறினார்.

அவரை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி 19 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 10 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

20 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 170 ரன்களை குவித்தது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் 33 ரங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஹேடன் வால்ஷ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்