மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இலங்கை வீரர்: இது மிகப் பெரிய பாக்கியம் என நெகிழ்ச்சி

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான தினேஷ் சண்டிமால் தனது மனைவியுடன் இராணுவ தலைமையகத்திற்கு சென்ற புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இலங்கை அணியின் விக்கெட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான தினேஷ் சண்டிமால் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நீக்க முடியாத வீரராக இருந்து வருகிறார்.

இருப்பினும் அவ்வப்போது மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து ஒதுக்கப்படும், அவர் மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்து அணியில் இடம் பிடிப்பார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்து, நாங்கள் இருவரும் இந்த இடத்தில் இருப்பதை பாக்கியமாக நினைக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினேஷ்சண்டிமால் தன் மனைவியுடன் இருக்கும் இராணுவதலைமையகம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவர் தன்னுடைய டுவிட்டர் குறிப்பில் #militarylife என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு தினேஷ் சண்டிமாலுக்கும், இஷிகா என்பவருக்கும் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்