இந்திய அணியில் இடம் பிடிக்க துடிக்கும் தமிழக வீரர்: சிறந்த பினிஷராக இருப்பேன் என்று உறுதி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெற்ற விஜய் ஹாசாரே டிராபி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், என்னுடைய குறிக்கோள் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைவது தான், அதிலும் நான் ஒரு நல்ல பினிசராக இருக்க விருப்பதாக கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் டோனியோடு சேர்ந்து ஓரங்கட்டபட்டவர் என்றால் அது தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் தான், அரையிறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

(BCCI)

ஆனால் அந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கை அபாரமான கேட்ச் மூலம் நியூசிலாந்து அணி வெளியேற்றியது. அதன் பின் இந்திய அணியில் இளம் வீரரான ரிஷப் பாண்ட்டிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அவர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாத்தால், இப்போது அந்த வாய்ப்பு மற்றொரு இளம் வீரரான சஞ்சு சாம்சன் பக்கம் திரும்பியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள தினேஷ் கார்த்திக், சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரிலும் மற்றும் சையத் முஸ்தாக் அலி தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார்.

Getty Images

விஜய் ஹசாரே தொடரில் மொத்தம் 418 ஓட்டங்கள் குவித்த தினேஷ் கார்த்திக், அதில் பேட்டிங் சராசரி 59.71 மற்றும் ஸ்டிரைக் ரேட் 121.15 வைத்துள்ளார். அதே போன்று சையத் முஸ்தாக் அலி தொடரில் 301 ஓட்டங்கள் குவித்த இவர் ஸ்டிரைக் ரேட் 126.47 வைத்துள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், தினேஷ் கார்த்திக் இந்த தொடர்களில் 5 மற்றும் 6-வது ஆளாக களமிறங்கி அசத்தியுள்ளார்.

ஒரு சிறந்த பினிசர் போன்று விளையாடியுள்ளார். இதனால் இது குறித்து கேட்ட போது, இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள், அதற்காக கடுமையாக முயற்சித்து வருகிறேன், இது ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும் ஆசை தான் இருப்பினும், நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை கொடுப்பேன்.

மீண்டும் எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக என்னுடைய திறமையை நிரூபிப்பேன், சிறந்த பினிசராகவும் இருப்பேன், அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, மகிழ்ச்சியாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியாவில் அடுத்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது, இது தான் டோனி மற்றும் தினேஷ் கார்த்திக்கின் கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் சமூகவலைத்தளங்களில் ரிஷப் பாண்டை தூக்கி விட்டு, தினேஷ் கார்த்திக், சன்சு சாம்சன், டோனியை டி20 உலக கோப்பை தொடருக்கு தயார்படுத்தலாம் என்ற கருத்தும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்