டோனி இல்லையென்றாலும்... இந்தியா-மேற்கிந்திய தீவு போட்டி நடைபெறும் மைதானத்தின் முன் ரசிகர்கள் செய்த செயல்

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று கேரளாவில் நடைபெறவுள்ள நிலையில், அந்த மைதானத்தில் டோனியின் ரசிகர்கள் மிகப் பெரிய பேனர் வைத்திருப்பது வைரலாகி வருகிறது.

இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருக்கும் மைதானத்தில் இன்று இரவு நடைபெறவுள்ளது.

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டதால்,மேற்கிந்திய தீவு அணி இன்றைய போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி உள்ளது.

இந்நிலையில் இன்று போட்டி நடைபெறும் திருவனந்தபுரம் மைதானத்தின் முன்பு டோனியின் 40 அடி பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

டோனி இல்லையென்றாலும், அவர் எப்போதும் மாஸ் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த பேனர் உள்ளது. டோனி அடுத்த மாதம் முதல் சர்வதேச போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்