இலங்கை நட்சத்திர வீரருக்கு டெங்கு... பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகல்

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் இரண்டு போட்டித் தொடர்களில் பங்கேற்க இலங்கை அணி 2019 டிசம்பர் 08ம் திகதி இன்று பாகிஸ்தானுக்கு புறப்படுகிறது.

ராவல்பிண்டி (டிசம்பர் 11-15) மற்றும் கராச்சி (டிசம்பர் 19-23) ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகள் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை நட்சத்திர வீரர் சுரங்கா லக்மல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ அணியில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் லக்மலின் டெஸ்ட் சாதனை மிகச் சிறப்பாக உள்ளது, அவர் 17 ஆட்டங்களில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...