பொல்லார்ட் அடித்த சிக்ஸரை அந்தரத்தில் பறந்து தடுத்த ரோகித்...மிரண்டு போய் பாராட்டிய கோஹ்லி வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் பொல்லார்ட் அடித்த சிக்ஸரை ரோகித் அற்புதமாக பறந்து தடுத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மேற்கிந்திய தீவு-இந்தியா இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் மேற்கிந்திய தீவு அணி நிர்ணயித்த 208 ஓட்டங்களை இந்திய அணி அசால்ட்டாக 18.4 ஓவரில் எட்டி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் மேற்கிந்திய தீவு அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, இந்திய அணியின் ஹிட் மேன் ஆன, ரோகித் சர்மா அற்புதமாக இரண்டு பீல்டிங் செய்தார்.

ஆட்டத்தின் 16-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் வீச, அதை எதிர்கொண்ட ஹிட்மர் ஸ்டிரைட் திசையில் தூக்கி அடித்தார். அப்போது கேட்ச் பிடிக்க வந்த வாஷிங்டன் சுந்தர், கேட்சை தவற விட, அடுத்து பந்தானது பவுண்டரி எல்லை கோடை நோக்கி சென்றது.

உடனே அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த ரோகித் அற்புதமாக பந்தை பவுண்டரி எல்லை கோட்டிற்குள் விடாமல் தடுத்தார். அதே ஓவரின் அடுத்த பந்தில் பொல்லார்ட் தூக்கி அடிக்க, அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா அதை சிக்ஸரும் போகவிடாமல், பவுண்டரியும் போகவிடாமல் அந்தரத்தில் பறந்து தடுத்தார்.

அப்போது அதே பந்தை பிடிக்க ஓடிவந்த கோஹ்லி, மிரண்டு போய் அவருக்கு கை கொடுத்து பாராட்டினார். ஆனால் இதே போட்டியில் ரோகித் சர்மா பொல்லார்ட் கொடுத்த அழகான கேட்சை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்