ஆபத்தான மைதானமாக மாறிய மெல்போர்ன்... பீதியில் உறைந்து போன அவுஸ்திரேலிய வீரர்கள் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவில் இருக்கும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியின் போது பந்து துடுப்பாட்ட வீரர்களின் முகத்தை பதம் பார்த்ததால், மைதானம் மிகவும் மோசமாகவும், ஆபத்தாகவும் இருப்பதாகவும் கூறி நிறுத்தப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் Western Australia-Victoria அணிகளுக்கிடையேயான போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டி துவங்கிய சில மணி நேரங்களிலே நிறுத்தப்பட்டது. ஏனெனில் பந்தானது மைதானத்தில் திடீரென்று பவுன்சர் ஆவதும், திடீரென்று கீழே வருவதுமாக இருந்துள்ளது.

இதில் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் வீசிய பந்தை ஷேன் மார்ஸ் எதிர்கொண்ட போது, பந்தானது தீடீரென்று பவுன்சர் ஆனதால், பந்து மார்ஷின் ஹெல்மட்டை தாக்கியது, அதே போன்று மார் ஸ்டோய்னிசும் ஒரு முறை ஹெல்மட் மற்றும் உடலில் பந்து தாக்கிய போட்டி மைதானம் சரியில்லை என்ற காரணத்தினால் நிறுத்தப்பட்டது.

முதல் நாள் போட்டி நிறுத்தப்பட்ட போது, Western Australia 3 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஸ்டோய்னிஸ் 2 ஓட்டங்களுடனும், கேமரூன் கிரீன் 7 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்