பழிக்கு பழி தீர்த்த கோஹ்லி... 2 ஆண்டுகளுக்கு பின் மேற்கிந்திய தீவு வீரரை நோட்புக் ஸ்டைலில் கொண்டாடிய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான டி20 போட்டியில் கேஸ்ரிக் வில்லியம்சின் நோட் புக் ஸ்டைலை கிண்டல் அடிக்கும் விதமாக கோஹ்லி சிக்ஸர் அடித்து அவரை போன்றே செய்து காட்டிய வீடியோவை ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு அணி, முதலில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

அதன் படி முதலில் ஆடிய மேற்கிந்திய தீவு அணி 207 ஓட்டங்கள் குவிக்க, இந்திய அணி கோஹ்லி(94 நாட் அவுட்) ருத்ரதாண்டவம் ஆடியதால், இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

இப்போட்டியில் கோஹ்லி கேஸ்ரிக் வில்லியம்சை பழிக்கும் பழி வாங்கும் விதமாக நடந்து கொண்டார். ஏனெனில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த போட்டி ஒன்றில் கோஹ்லியை அவுட்டாக்கிய கேஸ்ரிக் வில்லியம் நோட் புக் ஸ்டைலில் அவரை வெளியேற்றினார். அதை பெருமையுடன் கொண்டாடினார்.

அதை கோஹ்லி மறக்காமல், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஆட்டத்தின் 16-வது ஓவரை அவர் வீசிய போது கோஹ்லி அவரது பந்தில் சிக்ஸர் அடித்து, 2017-ஆம் ஆண்டு எப்படி கோஹ்லியை அவுட்டாக்கியவுடன் கேஸ்ரிக் வில்லியம் கொண்டாடினாரோ, அதே போன்று இன்று கோஹ்லி அவர் பந்தை சிக்ஸர் அடித்தவுடன் அதே ஸ்டைலில் கொண்டாடினார்.

இதைக் கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். சமூகவலைத்தளங்களில் இரண்டு வருடங்கள் அதை மறக்காமல் கோஹ்லி பழிக்கு பழி தீர்த்து கொண்டார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்