இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் யார்? வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளரான மிக்கி ஆர்த்தர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த சந்திக ஹதுருசிங்க பதவி விலகிய நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ருமேஷ் ரத்நாயக்க இருந்து வருகிறார்..

இந்நிலையில், மிக்கி ஆர்த்தர் இலங்கை கிரிக்கெட் அணி பற்றி அறிந்து கொள்ள இலங்கை வீரர்களுடன் சிறிது காலம் இணைந்திருக்க வேண்டும் என்று கூறிய காரணத்தினால் ருமேஷ் ரத்நாயக்கவே பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வரும் வரை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார்.

ANI

அதேவேளை பாகிஸ்தான் செல்லும் மிக்கி ஆர்த்தர் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியின் ஆலோசகர்களில் ஒருவராக காணப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

மிக்கி ஆர்த்தர் கடந்த 2005-ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தென்னாபிரிக்காவின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார்.

அதன் பின், 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார்.

தொடர்ந்து, மிக்கி ஆர்த்தர் கடந்த மூன்று வருடங்களுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மிக்கி ஆரத்தர் தலைமை பயிற்சியாளர் ஆனவுடன், இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரண்ட் ப்ளவர் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், டேவிட் சேக்கர் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்