ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த கோஹ்லி... வெளியான டாப் 10 பட்டியல்

Report Print Santhan in கிரிக்கெட்
264Shares

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, அவுஸ்திரேலியா வீரர் ஸ்மித்தை பின்னுக்கு முதலிடம் பிடித்தார்.

அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பான தடைக்கு பின் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி, முதல் இடத்தில் இருந்த கோஹ்லியை பின்னுக்கு தள்ளினார்.

இதனால் இவர்கள் இருவருக்குமிடையே யார் முதலில்? என்ற போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் வங்கதேச அணிக்கெதிரான கொல்கத்தாவில் நடைபெற்ற பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் கோஹ்லி 136 ஒட்டங்கள் குவித்ததன் மூலம் 928 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே சமயம் நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்மித் எதிர்பார்த்த அளவிற்கு ஆடாத்தால் அவர் 923 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆனால் கோஹ்லி முதல் இடத்தில் அதிக நேரம் நீடிக்கமாட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் டிசம்பர் மாதம் வரை இந்திய அணி எந்தவிதமான டெஸ்ட் போட்டியிலும் விளையாடப் போவதில்லை. ஜனவரி மாதம் நியூஸிலாந்து சென்றுதான் விளையாட உள்ளது. அதுவரை டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி பங்கேற்கமாட்டார்.

ஆனால், அவுஸ்திரேலியாவிற்கு பயணிக்க உள்ள நியூஸிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதால், இப்போட்டியில் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், மீண்டும் முதல் இடத்தை பிடிக்க முடியும், கோஹ்லி பின்னுக்கு தள்ளப்படுவார்.

கோஹ்லி, ஸ்மித்திற்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து வீரர் கானே வில்லியம்சன் 877 புள்ளிகளுடனும், இந்திய வீரர் சட்டீஸ்வர் புஜாரா 791 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ஐந்தாவது இடத்தில் அவுஸ்திரேலியா வீரர் வார்னர் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்