நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ டென்லி, கேட்ச்சை நழுவவிட்டு அனைவருக்கு ஷாக் கொடுத்தார்.
ஹாமிலடனில் நியூசிலாந்து-இங்கிலாந்து மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.
போட்டியின் போது இங்கிலாந்து நட்சத்திர பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தை நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் துடுப்பாடினார்.
It had to be England 🤣🤣🤣
— FOX SPORTS Australia (@FOXSportsAUS) December 3, 2019
Joe Denly with the worst dropped catch you'll ever see #NZvsENG pic.twitter.com/xNDUarT7lN
பந்து பழமாக அருகிலிருந்த ஜோ டென்லியிடம் சென்றது. விக்கெட் என நினைத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட இங்கிலாந்த வீரர்கள் கொண்டாட தொடங்கினார். ஆனால், இறுதியில் டென்லி பந்தை நழுவவிட்டார்.
கேட்ச் நழுவவிட்டதை நம்பமுடியாத ஆர்ச்சர், வியப்பில் அடக்க முடியாமல் சிரித்தார்.
கைக்கு வந்த கேட்ச்சை டென்லி நழுவவிட்டதை கண்டு இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் ஷாக் ஆகினார்.