அறையில் ‘ராக் பேப்பர் சிசர்ஸ்’ விளையாடிய அவுஸ்திரேலிய வீரர்கள்: இணையத்தை கலக்கும் வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

அடிலெய்டில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது மழை நிற்க காத்திருந்த வார்னர் மற்றும் பர்ன்ஸ் கை அசைத்து விளையாடிய விளையாட்டு இணையத்தில் வைரலாகியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இரண்டாவது டெஸ்டில் கட்டாய வெற்றிப்பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது.

இன்று இரு அணிகளுக்கும் இடையிலான பகல்-இரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட முடிவு செய்தது.

எனினும், மழை குறுக்கிட்டதால் போட்டி தடைப்பட்டது. இதன்போது, மழை நிற்க வேண்டி காத்திருந்த அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பாட்ட வார்னர்-பர்ன்ஸ் கை அசைத்து ராக், பேப்பர் மற்றும் சிசர்ஸ் விளையாட்டை விளையாடினர்.

இக்காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. மழை நின்ற பின் போட்டி தொங்கி நடைபெற்று வருகிறது.

57 ஓவர் முடிந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்துள்ளது. வார்னர் 116 ஓட்டங்களுடனும், லபுஸ்சாக்னே 84 ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்