மிரள வைத்த ரோகித்... தொடர்ந்து 3 வீரர்கள் ‘டக் அவுட்’: பிங்க் பந்தில் வங்கதேசத்தை திணறவிடும் இந்தியா

Report Print Basu in கிரிக்கெட்

இந்தியாவில் முதன் முறையாக இன்று தொடங்கியுள்ள பகல்-இரவு பிங்க பந்து டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர்கள் 3 பேர் தொடர்ந்து டக் அவுட்டாகியுள்ளனர்.

இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியாவில் முதன் முறையாக நடைபெறும் பகல்-இரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிசிசிஐ தலைவர் கங்குலி ஆகியோர் போட்டியை மணி அடித்து தொடங்கி வைத்தனர்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டியில் இந்திய அணியில்: மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோஹ்லி, ரகானே, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், சகா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி விளையாடும் அணியில் இடம்பிடித்தனர்.

வங்கதேச அணயில், ஷத்மான் இஸ்லாம், இம்ரல் கயீஸ், மொமினுல் ஹக், முகமது மிதுன், முஷ்பிகுர் ரகிம், மஹ்முதுல்லா, லித்தன் தாஸ், நயீம் ஹசன், அபு ஜாயேத், அல்அமின் ஹூசைன், எபாதத் ஹூசைன் இடம் பிடித்தனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்விடைந்த வங்கதேச அணி, வெற்றிப்பெறும் முனைப்போடு களமிறங்கியது. நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

6வது ஓவரில் இஷாந்த் சர்மா பந்தில் கயீஸ்(4) வெளியேறினார். இதனையடுத்து, உமேஷ் யாதவ் வீசி 10வது ஓவரில் மொமினுல் ஹக்(0), அதே ஓவரில் முகமது மிதுன்(0) மற்றும் முகமது ஷமி வீசிய 11வது ஓவரில் மஹ்முதுல்லா(0) என வரிசையாக 3 பேர் டக் அவுட்டாகி வங்கதேச ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தனர்.

மொமினுல் ஹக் கேட்ச்சை ரோகித் சர்மா பறந்து ஒற்றை கையில் பிடித்து அனைவரையும் மிரள வைத்தார். தேநீர் இடைவேளையின் போது வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 73 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்