பாகிஸ்தானுக்கு எதிராக 16 வீரர்கள் அடங்கிய வலுவான இலங்கை அணி அறிவிப்பு: தினேஷ் சண்டிமாலுக்கு வாய்ப்பு

Report Print Basu in கிரிக்கெட்

பாகிஸ்தாள் சுற்றுப்பணத்திற்கான அனுபவமிக்க மற்றும் வலுவான 16 பேர் அடங்கிய டெஸ்ட் அணியை இலங்கை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

ராவல்பிண்டி (டிசம்பர் 11-15) மற்றும் கராச்சி (டிசம்பர் 19-23) ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகள் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 16 வீரர்களும் குறைந்தபட்சம் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர்கள் ஆவர்.

பட்டியலில் ஓஷாடா பெர்னாண்டோ இரண்டு டெஸ்ட் போட்டிகளுடன் குறைந்த அனுபவம் வாய்ந்தவர், தொடரின் போது அணித்தலைவர் திமுத் கருணரத்னேவுடன் புதிய டெஸ்ட் தொடக்க ஆட்டகாரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தினேஷ் சண்டிமால் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார்.

இலங்கையின் புதிய விளையாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள 60 வயதான டலஸ் அழகப்பெரும, முதல் பணியாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான 16 வீரர்கள் அடங்கிய டெஸ்ட் அணியை அங்கீகரிப்பார்.

அணி விபரம்:

 1. திமுத் கருணரத்னே(அணித்தலைவர்)
 2. ஒஷாடா பெர்னாண்டோ
 3. குசால் மெண்டிஸ்
 4. ஏஞ்சலோ மேத்யூஸ்
 5. தினேஷ் சண்டிமால்
 6. தனஞ்ஜெய டி சில்வா
 7. நிரோஷன் டிக்வெல்ல
 8. தில்ருவன் பெரேரா
 9. லசித் எம்புல்டேனியா
 10. சுரங்கா லக்மல்
 11. விஷ்வா பெர்னாண்டோ
 12. கசுன் ராஜித
 13. லஹிரு குமாரா
 14. லக்ஷன் சண்டகன்
 15. குசால் பெரேரா
 16. லஹிரு திரிமன்னே

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்