மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த கோஹ்லியின் வெறித்தனமான ரசிகர்.. வைரலான புகைப்படங்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், மைதானத்துக்குள் நுழைந்த தனது ரசிகரை விராட் கோஹ்லி அறிவுரை கூறி அனுப்பினார்.

இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் கோஹ்லியின் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்தார்.

பாதுகாவலர்களை மீறி மைதானத்துக்குள் ஓடிவந்த அந்த ரசிகர் நேராக கேப்டன் கோஹ்லியின் பாதங்களை தொட்டு வணங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியான கோஹ்லி அவரை எழுப்பி அவரின் தோள்ப்பட்டையில் கைபோட்டுக்கொண்டு அவருக்கு அறிவுரை அளித்தார்.

அதற்குள் அந்த ரசிகரை மைதான பாதுகாவலர்கள் கூட்டிச்சென்றனர்.

ஆனால் கோஹ்லி அந்த ரசிகரை எதுவும் செய்ய வேண்டாம் என்றும், பாதுகாப்பாக அவரை அங்கிருந்து அழைத்துச் செல்லும் படியும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அந்த ரசிகரின் உடல் முழுதும் வி. கே என கோஹ்லியின் சுருக்கமான பெயரை பெயிண்ட்டால் எழுதியிருந்தார்.

அதோடு கோஹ்லியின் ஜெர்சி எண் 18 ஐயும் அந்த ரசிகர் பெயிண்ட்டால் எழுதியிருந்தார். மேலும் அந்த ரசிகரின் முகத்திலும் வி.கே என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த ரசிகரை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில், 22 வயதான அவரின் பெயர் சூரஜ் பிஸ்த் என்பதும், அவர் உத்தரகண்ட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் அவர் கூறிய தகவல்களை உறுதி செய்யப்பட்டு, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...