பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான நசீம் ஷாவின் தாய் மரணம் அடைந்ததால் வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினார்கள்.
பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியானது பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணியின் 16 வயதான வீரர் நசீம் ஷா இடம்பிடித்திருந்தார்.
இந்நிலையில் இவரது தாயார் நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவருக்கு தங்களது இரங்கலை தெரிவிக்கும் விதத்தில் இரண்டு அணிகளை சேர்ந்த வீரர்களும் தங்கள் இடது கையில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடினார்கள்.
நசீம் தாய் மரணத்துக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவு வெயிடப்பட்டது.
Heartfelt condolences to Nasim Shah and his family ♥
— cricket.com.au (@cricketcomau) November 12, 2019
Both sides are wearing black armbands today in respect to Nasim's mother who passed away last night.#AUSAvPAK