ஐசிசி-யின் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

Report Print Basu in கிரிக்கெட்

ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு நாள் போட்டியில் உலகளவில் சிறந்த விளங்கும் டாப் 10 துடுப்பாட்டகாரர்கள், பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ளது.

துடுப்பாட்டகாரர்கள் பட்டியலில் 895 புள்ளிகளுடன் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் துணைத்தலைவர் ரோகித் சர்மாவும், 3வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் உள்ளார்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில், 797 புள்ளிகளுடன் இந்திய நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் நியசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் உள்ளார்.

முன்னதாக, நான்காவது இடத்தில் இருந்து ஆப்கான் வீரர் முஜீப் உர் ரஹ்மான், தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 3வது இடத்தில் இருந்த தென் ஆப்பரிக்கா வீரர் ரபாடா 4வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

ஆல் ரவுண்டர் பட்டியலில் இங்கிலாந்து வீரர் பென் டோக்ஸ் தெடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆப்கான் வீரர் முகமது நபி 2வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் 3வது இடத்திலும் உள்ளனர்.

5வது இடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் வோக்ஸ் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரஷீத் கான் 5வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

icc

ஒரு நாள் போட்டி அணிகள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்தையும் தொடர்ந்து வரிசைப்படி இந்தியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முதல் பத்து இடத்தை பிடித்துள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்