ஐபிஎல் போட்டிக்கு முன் தேசியகீதம்!

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
131Shares

ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என பிசிசிஐக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது அந்தந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும், இதேபோல் ஐபிஎல் போட்டிகளின் போதும் இசைக்கப்பட வேண்டும்.

சினிமா தியேட்டர்கள், கால்பந்து லீக் மற்றும் புரோ கபடி போட்டிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

தொடக்க விழா நடைபெறாததால் இது சரியான தருணமே என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்