இந்திய வீரர் செய்த ஸ்டம்பிங்.. அவுட்டிற்கு அவுட்டில்லை என அறிவித்த நடுவர்? ஷாக் ஆன ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் மூன்றாவது நடுவர் கொடுத்த தீர்ப்பு சற்று நேரத்தில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, அங்கு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதில் தற்போது இரு அணிகளுக்கிடையேய டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றதால், இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி விளையாடி வருகிறது.

HotStar

அதன் படி முதலில் ஆடிய வங்கதேச அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து இந்திய அணி ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் சஹால் வீசிய ஓவரை எதிர் கொண்ட வங்கதேச வீரர் செளமியா சர்கர், இறங்கி அடித்து ஆட முற்பட்டார்.

HotStar

ஆனால் பந்தானது அவரை ஏமாற்றி,விக்கெட் கீப்பரான ரிஷப் பாண்ட்டிடம் சென்றதால், அவர் உடனே பிடித்து ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். இருப்பினும் அவர் பந்தை ஸ்டம்பிற்கு முன்னால் பிடித்தாரா? பின்னால் பிடித்தாரா? என்பது தெரியாததால், நடுவர் மூன்றாவது நடுவரிடம் சென்றார்.

HotStar

அதன் பின் இது அவுட் என்று கூறிய போது, மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் அவுட் இல்லை என்று வந்தது. இதனால் உடனடியாக செளமியா சர்கார் மீண்டும் மைதானத்திற்குள் வர முயற்சிக்க, அப்போது மீண்டும் அவுட் என்று கொடுக்கப்பட்டதால், அவர் பெளலியன் திரும்பினார்.

முதலில் இதைக் கண்ட இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவுட் இல்லையா? என்று அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் அவுட் என்றவுடன் கத்தி கூச்சலிட்டனர்.

HotStar

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்