ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிரபல வீரர்கள் கைது! மெதுவாக பேட்டிங் செய்ய பணம் வாங்கியது அம்பலம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இரண்டு கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில் கர்நாடகாவிலும் நடந்து வருகிறது.

இதில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சில வீரர்கள் மீது புகார் எழுந்தது.

இதை விசாரித்து வந்த பொலிசார் ஜி.எம்.கவுதம், அப்ரார் காஸி ஆகிய கிரிக்கெட் வீரர்களை இன்று காலை கைது செய்துள்ளனர்.

கவுதம், பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் தலைவராக இருக்கிறார். அப்ரார் விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்ட வீரர் ஆவார்.

கர்நாடக பிரிமீயர் லீக் இறுதிப் போட்டியில் பெல்லாரி - ஹுப்பாலி அணிகள் மோதின.

இதில் மெதுவாக பேட்டிங் செய்வதற்காக 20 லட்சம் ரூபாயை இவர்கள் பெற்றதாகவும் மற்றொரு போட்டியின் முடிவை முன்பே தீர்மானிக்க பணம் பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த புகார் தொடர்பாக ஏற்கனவே நிஷாந்த் சிங் செகாவத் என்பவர் கைது செய்யப்பட்டதை அடுத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கவுதமும், அப்ராரும் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். கவுதம் பெங்களூர், மும்பை இண்டியன்ஸ், டெல்லி அணிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்