ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த ஸ்ம்ரிதி மந்தனா

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்ம்ரிதி மந்தனா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீராங்கனையான 23 வயது ஸ்ம்ரிதி மந்தனா, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 51 இன்னிங்ஸ்களில் 2ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது, கால்விரலில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வில் இருந்து திரும்பிய மந்தனா, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெறும் 63 பந்துகளில் 74 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

இந்த போட்டியில் 2ஆயிரம் ரன்களை கடந்ததன் மூலம், சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை எட்டிய மூன்றாவது வீராங்கனை என்கிற சாதனையை படைத்துள்ளார்.

அவருக்கு முன்னதாக பெலிண்டா கிளார்க்(41 இன்னிங்ஸ்), மெக் லானிங்(44 இன்னிங்ஸ்) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

அதேபோல ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் சேர்த்து, 48 இன்னிங்ஸ்களில் இரண்டாயிரம் ரன்களை எட்டிய ஷிகர் தவானுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்