அணி மாறுகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் வெலவன் பஞ்சாப் அணியில் விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், எதிர்வரும் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபகாலங்களாக ஐபிஎல் தொடரில் அஸ்வினின் எதிர்காலம் பேசும் பொருளாக அமைந்தது. கடந்த இரண்டு சீசனில் பஞ்சாப் அணியை தலைவராக வழிநடத்திய அஸ்வின், ஆரம்பத்தில் அணியை சிறப்பாக வழிநடத்தினாலும் தொடர்ந்து இறுதிவரை அது தொடரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், அஸ்வினை டெல்லி அணியிடம் மாற்றி விட்டு அவர்களிடம் இருக்கும் இரண்டு வீரர்களை வாங்க பஞ்சாப் அணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் பரவியது.

முன்னதாக இதுகுறித்து பேசிய பஞ்சாப் அணி உரிமையாளர் Wadia, அஸ்வின் அணியின் ஒரு அங்கம் என்பதை உணர்ந்த பஞ்சாப் அணி வாரியம் தனது முடிவை மறுபரிசீலனை செய்தது.

டெல்லி உடனான பேச்சுவார்த்தை நடந்தன, ஆனால் ஒருபோதும் பலனளிக்கவில்லை. அஸ்வினின் கிரிக்கெட் விளையாடும் விதம் மற்றும் அவரது திறமை அவருக்காக பேசுகின்றன என கூறியிருந்தார்.

தற்போது பிசிசிஐ மூத்த அதிகாரி கூறியதாவது, ஆமாம், அஸ்வின் டெல்லி அணியில் இணையவுள்ளார். முன்பு அஸ்வினுக்கு பதில் இரண்டு வீரர்களை டெல்லி அணி தர மறுத்ததால் ஒப்பந்தம் தோல்வியடைந்தது.

தற்போது, அஸ்வினுக்கு பதில் இரண்டு வீரர்களை டெல்லி அணி தர சம்மதம் தெரிவித்துள்ளதால், அஸ்வின் டெல்லி அணியில இணையவுள்ளது 99 சதவீதம் முடிந்தது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்