பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு கோஹ்லியை சம்மதிக்க வைத்தது எப்படி? ரகசியத்தை உடைத்த கங்குலி

Report Print Santhan in கிரிக்கெட்

பகலிரவு டெஸ்ட் போட்டியே வேண்டாம் என்று இந்திய அணி ஒதுக்கி வந்த நிலையில், அதற்கு எப்படி அந்தணி சம்மதித்தது, கோஹ்லியிடம் சம்மதம் வாங்க கங்குலி எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆரம்பித்ததில், இருந்து அதன் மற்ற நாடுகளும் பகலிரவு, டெஸ்ட் போட்டி குறித்து ஆலோசித்து வருகின்றன.

அந்த வகையில், இந்தியா-வங்கதேசம் கொல்கத்தாவில் விளையாடவிருக்கும் டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது, இதற்காக இந்திய அணியிடம் புதிய பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றிருக்கும் கங்குலி பேசி சம்மதம் வாங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், இத்தனை நாட்களாக பகலிரவு டெஸ்ட் போட்டியை நாம் ஆடவில்லை என்பது எனக்கு தெரியவில்லை.

நான் கோஹ்லியை ஒரு மணி நேரம் சந்தித்தேன். என்னுடைய முதல் கேள்வியே நாம் ஏன் பகலிரவு டெஸ்ட் வைக்கக் கூடாது என்றேன். அதற்கு அவர், மூன்றே விநாடிகளில் ஊம், ஏன் வைக்கக் கூடாது, விளையாடுவோம் என்று உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் கோஹ்லிக்கு பகலிரவு டெஸ்ட் போட்டி ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே உள்ளது.

டி20 என்றால் மைதானம் நிரம்பி வழிகிறது, டெஸ்ட் கிரிக்கெட்டையும் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். இந்தியாவுக்கு இது தொடக்கம் மட்டுமே. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியையும் மேலும் விறுவிறுப்பாக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று கங்குலி கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்