கடைசி பந்து.. சதம் கனவு! சூப்பர் மேனாக மாறி ஒற்றை கையில் கேட்ச் பிடித்து... முறியடித்த ஹர்மன்பிரீத்: வைரல் வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள்-இந்தியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், ஒற்றை கையில் பறந்து கேட்ச் பிடித்து மேற்கிந்திய அணித்தலைவி டெய்லரின் சத கனவை முறியடித்தார்.

Antigua மைதானத்தில் நடந்த இரு அணிக்களுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியல் வென்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி துடுப்பெடுத்தாடியது.

கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவி டெய்லர் 88 ஓட்டங்களில் துடுப்பாடினார். இந்திய வீராங்கனை Bisht வீசிய பந்தை சிக்சர் விளாசி 94 ஓட்டங்கள் எடுத்தார் டெய்லர்.

கடைசி பந்தில் சிக்சர் அடித்தல் சதம் என்ற கனவில் டெய்லர் துடுப்பாடினார். அதே போல், Bisht வீசிய போட்டியின் கடைசி பந்தை நேராக பறக்கவிட்டார். பந்து சிக்சர் சென்றவிடும் என அனைவரும் நினைக்க, ஹர்மன்பிரீத் கவுர் பறந்து ஒற்றை கையில் அசத்தால் கேட்ச் பிடித்து டெய்லரின் சத கனவை முறியடித்தார்.

எனினும், முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா மகளிர் அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளிடம் தோல்விடைந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்