நியூசிலாந்து மண்ணில் அந்த அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி! 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி

Report Print Raju Raju in கிரிக்கெட்

நியூசிலாந்தில் நடைபெற்ற அந்நாட்டுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரில் முதலாவது ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 44 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜேம்ஸ் வின்ஸ் 59 ரன்களும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), பேர்ஸ்டோ 35 ரன்களும், கேப்டன் மோர்கன் 34 ரன்களும் எடுத்தனர்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நாளை நடக்கிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்