காயமடைந்த ரோகித் சர்மா உடல்நிலை குறித்து பிசிசிஐ மருத்துவ குழு வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரோகித் சர்மா, முதல் டி-20 போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்த தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 டி-20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி டெல்லியில் நவம்பர் 3ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நேற்று ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இலங்கை வீரர் நுவான் செனவிரத்ன வீசிய பந்து ரோகித்தின் வயிற்று பகுதியில் பலமாக தாக்கியது. காயமடைந்த ரோகித் பாதியிலேயே வெளியேறினார்.

இதனால், அவர் முதல் டி-20 போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ரோகித்தின் உடல்நிலை குறித்து ரசிகர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ரோகித் முதல் போட்டியில் விளையாட உடற்தகுதியுடன் இருப்பதாகவும், அவரை சோதனை செய்த பிசிசிஐ மருத்துவ குழு, ரோகித் உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

மேலும், நவம்பர் 3ம் திகதி நடக்கவிருக்கும் முதல் போட்டியில் ரோகித் களமிறங்குவார் என்பதை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்