சூதாட்ட தரகர்களுடன் பேசி வசமாக சிக்கிய ஷகிப் அல் ஹசன்! உரையாடல்கள் வெளியானது

Report Print Raju Raju in கிரிக்கெட்

சூதாட்ட தரகருடன் ஷகிப் அல் ஹசன் பேசிய உரையாடல் விவரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய விதிகளை மீறி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தம் மேற்கொண்டதால், அவருக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், அவரை இடைத்தரகர்கள் அணுகியது பற்றி உரிய தகவல் தெரிவிக்கவில்லை என கூறி ஒரு வருட முழு தடை மற்றும் 12 மாத கால தற்காலிக நீக்கம் ஆகியவற்றை ஐ.சி.சி. விதித்துள்ளது.

இதனால் அவர் 2 வருட காலத்திற்கு அணியில் விளையாட முடியாது. இந்தியாவில் நடைபெற உள்ள தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் சர்வதேச போட்டி ஒன்றில் விளையாடுவதற்கு முன்பு அல் ஹசனை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகியுள்ளார். இது குறித்த விவரங்களை ஐசிசி வெளியிட்டு உள்ளது.

அதில், சகோ, இந்தத் தொடரில் ஏதாவது இருக்கிறதா?' என ஷாகிபுடன் தரகரின் உரையாடல் செல்கிறது.

தீபக் அகர்வால் மற்ற இரண்டு இடைத்தரகர்கள் வங்கதேச பிரீமியர் லீக்கின் போது ஷாகிப்பை அணுகியுள்ளனர். அதைத் தொடர்ந்து 2018 ஜனவரியில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடரின் போதும் அணுகி உள்ளனர்.

அந்த சமயத்தில் நாம் இதில் வேலை செய்கிறோமா அல்லது ஐபிஎல் வரை காத்திருக்கிறேன் ஹாகிப் அவர்களிடம் கூறினார்.

இதோடு அகர்வால் பிட்காயின்கள், டொலர் கணக்குகள் குறித்து ஷாகிப்பிற்கு செய்தி அனுப்பினார்,

இந்த உரையாடலின் போது, ​​அவரை முதலில் சந்திக்க விரும்புவதாக ஷாகிப் அகர்வாலிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்