நிச்சய வெற்றியை நோக்கி இன்று களமிறங்கும் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இப்போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இன்று நடக்கவுள்ள இரண்டாவது போட்டியில் வெற்றியீட்டினால் மாத்திரமே இலங்கை அணியால் தொடரைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை காணப்படுகின்றது.

இதனால் இந்த போட்டியை ரசிகர்கள் மிகந்த ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.

இன்றைய போட்டியில் கசுன் ராஜித்தவுக்கு பதிலாக இசுரு உதான விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவின் தலைமையின் கீழ் இறுதியாக விளையாடிய 8 இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

அதே நேரத்தில் இலங்கை அணி இறுதியாக அவுஸ்திரேலியாவில் விளையாடியுள்ள 3 டி20 தொடர்களையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்