மைதானத்தில் பந்து சிதறும்.. மிகவும் அபாயகரமான வீரர்! வாழ்த்து மழையில் நனையும் சேவாக்

Report Print Kabilan in கிரிக்கெட்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக்கிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி, முதல் பந்தையே சிக்சர் அல்லது பவுண்டரியாக விளாசுபவர் வீரேந்திர சேவாக்.

அதிரடியான ஆட்டத்திற்கு சொந்தக்காரரான சேவாக், ஒரே இன்னிங்சில் 300 ஓட்டங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தவர்.

278 பந்துகளிலேயே 300 ஓட்டங்கள் எடுத்து, அதிவேகமாக இந்த ஸ்கோரை எடுத்த வீரர் என்ற உலக சாதனையையும் படைத்தார். இந்திய அணிக்காக சேவாக், 104 டெஸ்ட் போட்டிகளில் 8,586 ஓட்டங்களும், 251 ஒருநாள் போட்டிகளில் 8,273 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

மேலும், 19 டி20 போட்டிகளில் 394 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதுபோல் பல சாதனைகளை படைத்த சேவாக், இன்று 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு இன்னாள், முன்னாள் வீரர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘கிரிக்கெட் ஆடுகளத்தில் பந்துகளை அதிரடியாக அடிப்பது மட்டுமில்லாமல், களத்திற்கு வெளியேவும் ஜோக் அடிப்பது உங்களது இயல்பு. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீரு’ என தெரிவித்துள்ளார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ‘நான் பந்துவீசியவர்களில் மிகவும் கடினமான துடுப்பாட்ட சேவாக்கிற்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ எனவும்,

இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமண், ‘என்னுடைய சிறப்பான நண்பர் வீரேந்திர சேவாக்கிற்கு என் சிறப்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ எனவும் வாழ்த்தியுள்ளனர்.

இதேபோல் இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களது ட்விட்டர் பக்கத்தில், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் Mr.Triple Centurion வீரேந்திர சேவாக்’ என பதிவிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்