விளையாடி ஓய்ந்துவிட்டேன்... என்னை விட்டுடுங்க.. கோஹ்லி எடுத்த முடிவு

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி இந்தியா அடுத்து ஆட உள்ள டி20 தொடரில் ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த பத்து மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருகிறார் கோஹ்லி. அதனால், அவர் விடுப்பு எடுத்துக் கொள்ள இருப்பதாக பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது. விராட் கோலி ஓய்வு பெற்றால், யார் அந்த தொடருக்கு கேப்டனாக செயல்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கோஹ்லி கடைசியாக ஜனவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்து ஒருநாள் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ஓய்வு பெற்றார்.

அதன் பின் எந்த தொடரையும் விடாமல் ஆடி வந்தார் கோஹ்லி.

இந்திய அணி இந்த ஆண்டு துவக்கம் முதல் இடைவிடாமல் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வந்ததால், அவர் அனைத்திலும் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேற்கிந்திய தீவு தொடர் முடிந்த மிகச் சிறிய இடைவெளியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

மூன்று டி20 போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரிலும் கோஹ்லி ஆடி வருகிறார்.

இந்த நீண்ட நெடிய தொடர்களால் சோர்ந்து இருக்கும் கோஹ்லி தனக்கு ஓய்வு அவசியம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

இதனால் இந்தியா அடுத்து ஆட உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் கோஹ்லி ஓய்வு எடுக்க உள்ளார். இந்த தொடர் நவம்பர் 3 முதல் 10 வரை நடைபெற உள்ளது.

தென்னாப்பிரிக்க தொடர் அக்டோபர் 23 அன்று நிறைவடைய உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் மட்டுமே ஓய்வு பெறும் கோஹ்லி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நிச்சயம் ஆடுவார் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்