இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய தமிழன்... குவியும் பாராட்டு!

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட வீரர் விளையாடி வருவதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். தென்னாபிரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நாட்டுக்காக களமிறங்கும் 101-வது வீரர் இவர் ஆவார்.

இவர் பெயர் செனூரன் முத்துசாமி என்று இருப்பதால், இவர் தமிழர் என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில் அவரே நான் தமிழன் தான், தமிழகத்தைச் சேர்ந்தவன் தான் என்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா வீரராக இருக்கும் இவர், பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரெளண்டராக வலம் வரும் இவர் டர்பனில் பிறந்துள்ளார்.

25 வயதாகும் செனூரனின் குடும்பம் தமிழகத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே குடியேறிவிட்டது.

தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த செனூரன் முத்துசாமி, தனது பூர்வீகம் சென்னை என்றும், நாகப்பட்டினத்தில் உறவினர்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வாழும் டர்பனில் வசிக்கிறோம். அங்கே எங்களது குடும்பத்தினருடன் கோவிலுக்குச் செல்வது வழக்கம்.

என்னுடைய குடும்பத்தில் இன்னமும் சிலர் தமிழ் பேசுகிறார்கள். துரதிருஷ்டவசமாக எனக்கு தமிழ் பேசத்தெரியாது. ஆனால் மெல்ல மெல்ல தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

முத்துசாமி பிரதானமாக ஒரு சுழற்பந்து வீச்சாளர். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங்கிலும் அசத்தியிருக்கிறார்.

இவர் தனக்கு இலங்கையைச் சேர்ந்த ரங்கனா ஹெராத், சங்கக்காரா ஆகியோர் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 69 போட்டிகளில் 3403 ஓட்டங்கள் குவித்திருக்கிறார்.

பந்துவீச்சில் 129 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு சிறந்த வீரர் விருதையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்