தொடக்க வீரராக களம் இறங்கி சதம் அடித்த ரோகித் சர்மா! எழுந்து நின்று கைதட்டிய வீரர்கள்

Report Print Abisha in கிரிக்கெட்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித்சர்மா சிறப்பாக ஆடிவருவதற்கு கைத்தட்டல்கள் பெற்றுள்ளார்.

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி துடுப்பாட்டதை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கினார். எனவே அவர் மீது அனைவருக்கும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, 84 பந்துகளில் அரை சதம் கடந்து தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

பின், தேனீர் இடைவேளைக்குப் பிறகு சதம் அடித்து அசத்தினார் ரோகித். 154 பந்துகளில் 10 பவண்டரி, 4 சிக்சருடன் இந்த இலக்கை அவர் எட்டினார். தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்ததால் சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்