இந்திய சர்வதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக களமிறங்கும் தமிழர்! அவர் யார் தெரியுமா? முழு தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க சர்வதேச அணிக்காக தமிழர் ஒருவர் விளையாடுகிறார் என தெரியவந்துள்ளது.

செனுரான் முத்துசாமி தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், அவரது பூர்வீகம் தமிழ்நாடு தான்.

தமிழரான அவர் சர்வதேச அரங்கில் இந்திய அணிக்கு எதிராக, இந்திய மண்ணில் அறிமுகம் ஆகியுள்ளார்.

ஆம், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் போட்டியில் விளையாடி வருகிறார் முத்துசாமி.

25 வயது ஆகும் செனுரான் முத்துசாமி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்தவர். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தென்னாப்பிரிக்க நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் அணிகளில் இடம் பிடித்து ஆடி வந்தார்.

இடது கை பேட்டிங் மற்றும் இடது கை சுழற் பந்துவீச்சாளரான செனுரான் முத்துசாமி ஆல் - ரவுண்டராக வலம் வருகிறார்.

முத்துசாமியின் முதல் தர பேட்டிங் சராசரி 32.72 ஆகும். லிஸ்ட் ஏ போட்டிகளில் 26.60 பேட்டிங் சராசரி வைத்துள்ளார்.

69 முதல் தர போட்டிகளில் 129 விக்கெட்களும், 52 லிஸ்ட் ஏ போட்டிகளில் 48 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார்.

டெஸ்ட் தொடருக்கு முன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒரே ஒரு ஓவர் தான் பந்துவீசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி கலக்கினார் முத்துசாமி

இந்திய அணிக்கு எதிரான போட்டி முத்துசாமிக்கு நல்ல அறிமுகமாக கருதப்படுகிறது. காரணம், விசாகப்பட்டினம் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும்.

இரண்டாம் நாள் முதல் சுழற் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம் என கூறப்படுகிறது. எனவே, அவர் அதிக விக்கெட்கள் வீழ்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்