கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்து எடுக்கிறார்களா..? இனி புகார் அளிக்க முடியும்

Report Print Abisha in கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துகொள்வது குறித்து புகார் அளிக்க புதிய helpline எண் பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்துகள் உட்கொள்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த குற்றசெயல்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய முயற்சியை தொடங்கி உள்ளது.

அந்த வகையில், உறுப்பினர்களும் கிரிக்கெட் சங்கங்களும் போதைப் பொருள் குறித்த புகார்களை அணுகவும் வீரர்கள் வயதை மாற்றி தெரிவித்து மோசடி செய்த புகார்களை தெரிவிக்கவும் தனிக் குழுவொன்றையும் பிசிசிஐ அமைத்துள்ளது.

இதற்கான helpline எண்களும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்கள் இந்தியா முழுவதும் உள்ள பிசிசிஐ அலுவலகங்கள், கிரிக்கெட் மைதானங்கள் போன்றவற்றில் காட்சிக்கு வைக்கப்படும்.

போதைப் பொருள், ஊக்கமருந்து , முறைகேடு ஆகியவற்றில் இருந்து 2019-20 சீசன் கிரிக்கெட் போட்டிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்