இலங்கை-பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் இப்படி ஒரு பிரச்சனை நடந்ததா? மரண கலாய் கலாய்க்கும் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் மைதானத்தில் இருந்த மின் விளக்கு சொதப்பியதால், ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கலாய்த்து வருகின்றன.

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, இலங்கை அணி அங்கு தற்போது மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் கராய்ச்சில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மின் விளக்கு பிரச்சனையால், போட்டி சுமார் 26 நிமிடங்கள் தாமதமானது.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை, ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். மேலும் சிலர் ஒழுங்காக கரண்ட் பில் கட்ட சொல்லி என்று படுமோசமான கலாய்த்து வருகின்றனர்.

இரு அணிகளுக்கிடையே மூன்று மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராய்ச்சியில் நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்