டோனி அப்படி அவுட்டானவுடன் கண்ணீர் விட்டு அழுதேன்... முதல் முறையாக கூறிய இந்திய வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
194Shares

உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் டோனி ரன் அவுட் ஆனவுடன் கண்கலங்கி விட்டேன் என்று இந்திய வீரர் சஹால் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது.

இப்போட்டியின் கடைசி கட்டத்தில் டோனி எதிர்பாரதவிதமாக ரன் அவுட் ஆனார். அந்த ரன் அவுட் தான் இந்திய அணியின் தோல்வியை உறுதி செய்தது.

இந்நிலையில் அப்போது இந்திய அணியில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் சாஹால் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், டோனி அவுட்டானதும் நான் தான் களத்திற்கு சென்றேன். என்னால் அழுகையை அடக்கமுடியவில்லை. கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கிக்கொண்டு துடுப்பெடுத்து ஆட சென்றேன் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்