விராட் கோஹ்லி சாதனையை தகர்த்தெறிந்த இளம் கிரிக்கெட் வீரர்... அவர் யார் தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்
288Shares

விராட் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி நேபாள கிரிக்கெட் அணி தலைவர் பரஸ் கட்கா புதிய சாதனை படைத்துள்ளார்.

சிங்கப்பூர், நேபாளம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் கலந்துகொள்ளும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய தினம் சிங்கப்பூர் மற்றும் நேபாள அணிகள் மல்லுக்கட்டின.

இதில் டாஸ் வென்ற சிங்கப்பூர் முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் கேப்டன் டிம் டேவிட்டின் (44 பந்துகளில் 64 ரன்கள்) அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 151 ரன்களை எடுத்தது.

152 ரன்கள் வெற்றி இலக்குடன் நேபாள அணியின் தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் பரஸ் கட்கா மற்றும் ஆரிஃப் ஷேக் ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய நேபாள கேப்டன் பரஸ் கட்கா பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக பறக்க விட்டார். 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் ஒரு புதிய உலக சாதனையையும் கேப்டன் பரஸ் கட்கா படைத்தார். கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி அணிகளைச் சேர்ந்த கேப்டன்கள் கூட இதுவரை டி20 போட்டிகளில் சதமடித்திராத நிலையில் இந்த அரிய உலக சாதனையை படைத்த முதல் கேப்டனாக பரஸ் கட்கா மாறியுள்ளார்.

இந்த வகையில் நெதர்லாந்தின் கேப்டன் பீட்டர் சீலர் 12 நாட்களுக்கு முன்பாக ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 96 ரன்கள் எடுத்ததே ஒரு கேப்டனின் அதிகபட்ச ரன் சேகரிப்பாகும்.

ஆவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (90 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக), மேற்கு இந்திய தீவுகளின் கிரிஸ் கெய்ல் (88, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக), விராட் கோலி (82, இலங்கைக்கு எதிராக) என முன்னணி அணிகளின் கேப்டன்கள் கூட இந்த வரிசையில் பின்தங்கியுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்