அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதம் விளாசிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி Chamari Athapaththu, 24 மணிநேரத்தில் சரித்திரத்தை மாற்றியமைத்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டி-20 போட்டியில் நேற்று சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் நேபாளல் அணித்தலைவர் paras khadka, 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல 106 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப்பெற செய்தார்.
இதன் மூலம் சர்வதேச டி-20 போட்டியில் சதம் அடித்த முதல் நேபாள வீரர் என சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி, சர்வதேச டி-20 போட்டிகளில் சேசிங் போது சதம் அடித்த முதல் அணித்தலைவர் என்ற வரலாற்றை படைத்தார்.
இந்நிலையில், இன்று சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய-இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டியில் இலங்கை அணி போராடி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலிய வீராங்கனை Beth Mooney 113 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 176 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இலங்கை தரப்பில் சிறப்பாக விளையாடி அணித்தலைவி Chamari Athapaththu 66 பந்தில்.. 12 பவுண்டரி.. 6 சிக்ஸர் என 113 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் 24 மணிநேரத்திற்குள் சர்வதேச டி-20 போட்டிகளில் சேசிங் போது சதம் அடித்த அணித்தலைவர் என்ற வரலாற்று சாதனை பட்டியலில் நோபள வீரர் paras khadka-வுடன் இணைந்தார் Chamari Athapaththu. மேலும், முதல் பெண் அணித்தலைவர் என்ற சாதனையும் படைத்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும ஒரு நாள் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. முதல் போட்டியில் வென்ற அவுஸ்திரேலியா அணி 1-0 என டி-20 தொடரில் முன்னிலையில் உள்ளது.