தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு முதல்முறையாக பெண் தலைவர் தெரிவு!

Report Print Kabilan in கிரிக்கெட்
80Shares

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் 23ஆம் திகதி நடைபெறுகிறது. இதற்கு முன்பாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில் பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தல் நடத்தப்பட்டுவிட்டது. அதன்படி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவருமான என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் ஒருமனதாக தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இதன்மூலம், முதல்முறையாக மாநில கிரிக்கெட் சங்கங்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பெண் என்ற பெருமையை ரூபா குருநாத் பெற்றுள்ளார்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவியில் இருக்கக்கூடாது என்றும், ஒருவர் தொடர்ந்து 2 முறை பதவி வகித்தால் ஒரு வருட இடைவெளிக்கு பின்பே மீண்டும் பதவிக்கு வர வேண்டும்.

மேலும் ஒரே நேரத்தில் இரண்டு பதவி வகிக்கக்கூடாது என்பது உட்பட பல புதிய விதிமுறைகளை லோதா குழு நிர்வாகம் பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையிலேயே, மாநில மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்