டோனியை கொண்டாடிய மக்கள்! இன்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கிய நாள்... வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்
137Shares

இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் டி20 உலகக்கிண்ணத்தை வென்று சாதனை படைத்த நிலையில் அது தொடர்பிலான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

டி20 உலகக்கிண்ணம் தொடர் முதல்முறையாக கடந்த 2007-ல் நடைபெற்றது.

இதில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, கென்யா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்றன.

லீக் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிபோட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி ஜோஹன்ஸ்பர்க்கில் உள்ள வாண்டெரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. டோனி தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக கவுதம் காம்பீர் 75 ஓட்டங்களை குவித்தார்.

158 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 13 ஓட்டங்கள் இருந்த போது அந்த ஓவரை ஜொஹிந்தர் சர்மா வீசினார்.

ஏற்கெனவே 9 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்திருந்த நிலையில் முதல் 2 பந்துகளில் 7 ஓட்டங்கள் அடிக்கப்பட்டது. கடைசி 4 பந்துகளில் 6 ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்த போது ஸ்ரீசாந்திடம் கேட்ச் கொடுத்து மிஸ்பா அவுட்டானர்.

இதனால் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இப்போட்டியில் இர்பான் பதான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

முதல் டி20 உலகக்கிண்ணத்தை இந்தியா வென்றதையடுத்து அணித்தலைவர் டோனியை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அப்போது கொண்டாடினார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்