இலங்கை அணியின் முக்கிய வீரருக்கு திடீர் தடை!

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் அகில தனஞ்செயவுக்கு பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

இளம் வீரர் அகில தனஞ்செய, வலக்கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் இடக்கை துடுப்பாட்ட வீரர் ஆவார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, இவரது பந்துவீச்சு சீராக இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி நிறுவனத்தில் அவர் தனது பந்துவீச்சை நிரூப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி டாக்டர். ஆதித்யா மற்றும் ஞானவேல் ஆகியோரின் மேற்பார்வையில், அகில தனஞ்செயவின் பந்துவீச்சு இயந்திர மதிப்பீடு மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தனஞ்செயவின் பந்துவீச்சு முறை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரியில் இருந்து வெளியேறியுள்ளது. அத்துடன் 4 முதல் 17 டிகிரில் அவரது பந்துவீச்சு சீரற்றதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Getty Images

இந்த முடிவுகள் ஐ.சி.சியின் இயக்க நிபுணர் Dr. Andrea Cuttiயின் மூலம் சரிபார்க்கப்பட்டு மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தனஞ்செய 2020 ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி வரை பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது அவருக்கு இரண்டாவது முறையாக விதிக்கப்படும் இடைநீக்கம் ஆகும். ஏற்கனவே, கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த முடிவுக்கு எதிராக முறையீடு செய்வதற்கான வரையறுக்கப்பட்ட உரிமையை, விதிமுறைகளின் 8வது பிரிவு வழங்கிறது என இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்