நாங்கள் முழுமையாக தோற்கவில்லை..! இந்திய அணியை மிரட்டிய தென் ஆப்பிரிக்க வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

மொஹாலியில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டி குறித்து, தென் ஆப்பிரிக்க அணி வீரர் பவுமா தெரிவித்துள்ளார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி மொஹாலியில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவரில் 149 ஓட்டங்கள் எடுத்தது.

அணித்தலைவர் டி காக் 52 ஓட்டங்களும், டெம்பா பவுமா 49 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் ஆடிய இந்திய அணி 19 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா வெற்றி பெற்றாலும் நாங்கள் முழுவதுமாக தோற்கடிக்கப்படவில்லை என்று, தென் ஆப்பிரிக்க அணி வீரர் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பவுமா கூறுகையில், ‘10 முதல் 12 ஓவர் வரை நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். நல்ல தொடக்கம் கிடைத்ததை கடைசி வரை நாங்கள் சரியாக கொண்டு செல்லவில்லை.

12 முதல் 15 ஓவர்களுக்கிடையில் எங்களது ஆட்டத்தை இழந்தோம். டேவிட் மில்லர் 13வது ஓவரில் களம் இறங்கும்போது, நாங்கள் வலிமையான நிலையில் இருந்தோம்.

அப்போது 180 ஓட்டங்களை எட்டும் வாய்ப்பு இருந்தது. அந்த உத்வேகத்தை நானும் மற்ற வீரர்களும் பெற தவறிவிட்டோம். நாங்கள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டோம் என்று நினைக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்