52 பந்துகளில் 72 ஓட்டங்கள்.. சாதனை படைத்த கோஹ்லி! பாராட்டிய பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மொஹாலியில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, 52 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.

இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 50க்கும் மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை கோஹ்லி படைத்துள்ளார்.

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கோஹ்லி இதுவரை 71 போட்டிகளில் 22 அரைசதங்களை விளாசியுள்ளார்.

கோஹ்லி இந்தாண்டில் டெஸ்டில் 53.14 சராசரியையும், ஒருநாள் போட்டிகளில் 60.31 சராசரியையும், டி20யில் 50.85 சராசரியையும் வைத்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி சாதனை படைத்த கோஹ்லிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில்,

‘வாழ்த்துக்கள் விராட் கோஹ்லி. நீங்கள் ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரர். நீங்கள் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன். அத்துடன் உங்கள் ஆட்டத்தின் மூலம் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சி அடைய வைப்பீர்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்