பகிரங்கமாக மன்னிப்பு கோரிய இலங்கை கிரிக்கெட் சபை! காரணம் இது தான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையில் ஊழல் குறித்த கோப் குழுவின் விசாரணைகளுக்கு வருகை தராதது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் கோப் தலைமையிடம் மன்னிப்பை கோரியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 3 ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக வரும் படி இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபைக்கு பணிப்பு விடுத்தும் அதன் தலைவர் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் வருகை தரவில்லை.

இந்நிலையில் நேற்று இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் சம்மி சில்வா, பொருளாளர் லலித் ரம்புக்வெல, பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, செயலாளர் மொஹான் டி சில்வா மற்றும் உப தலைவர் ரவீன் விக்ரமரத்ன ஆகியோர் கோப் குழுவில் விசாரணைகளுக்காக கலந்துகொண்டனர்.

அப்போது கடந்த 3 ஆம் திகதி கோப் குழுவிற்கு அழைப்பு விடுத்தும் வருகை தராததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எனினும் ஆசிய கிரிக்கெட் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியதால் வருகை தர முடியவில்லை என தலைவர் சம்மி சில்வா தெளிவுபடுத்தினார்.

பொருளாளர் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வரம்முடியவில்லை என கூறினார்

எனினும் நீங்கள் மன்னிப்புக் கேட்பதால் விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் வேறு ஒரு நாளில் விசாரணைகளுக்கு வரவேண்டும் எனவும் கோப் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்