நாங்கள் திணறினோம்.. தற்போது மற்ற அணிகளுக்கு சவால் கொடுக்க தயாராக இருக்கிறோம்! பாகிஸ்தான் அணித்தலைவர்

Report Print Kabilan in கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மற்ற அணிகளுக்கு சவாலாக விளங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான மிஸ்பா-உல்-ஹக், யூனிஸ் கான் ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றதால் அந்த அணி டெஸ்ட் போட்டிகளில் திணறி வருகிறது.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடுவதில்லை. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் முடிந்த ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய அவுஸ்திரேலியா அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் இறுதியில் அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில், உலக சாம்பியன்ஷிப் சவாலுக்கு நாங்கள் தயார் என பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

AP

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மிஸ்பா, யூனிஸ் கான் ஆகியோரின் ஓய்வுக்குப் பின், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்றம் இறக்கமாகவே எங்கள் ஆட்டம் இருந்து வருகிறது. உலக சாம்பியன்ஷிப்பில் மற்ற அணிகளுக்கு நாங்கள் சவால் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றே நான் கருதுகிறேன்.

மிஸ்பா, யூனிஸ்கான் இல்லாமல் நாங்கள் திணறினோம். அதன்பின் அணியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டோம். தற்போது எங்களது துடுப்பாட்ட வீரர்கள் அந்த இடத்தை நிரப்பி, பொறுப்பை கையில் எடுத்துக் கொள்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்